அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்: இந்தியா – அமெரிக்கா இடையே, இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறேன். தேசிய நலன்களை பாதுகாப்பதற்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். அதேநேரம், அமெரிக்காவின் 25 சதவீத […]

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று மீண்டும் 10 காசுகள் சரிந்து ரூ.87.57 ஆக உள்ளது. அமெரிக்காவில் அதிபராக டொனால்ட் டிரம்ப் உள்ளார். டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதேநேரத்தில், இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு சரிவு பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளது. இந்தியா இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக இருப்பதால், வலுவடையும் டாலரின் மதிப்பு இந்தியாவுக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். டாலருக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து […]

1947 க்குப் பிறகு இந்தியாவின் இறையாண்மையை விரைவாக ஏற்றுக்கொண்ட நாடுகளையும், பல ஆண்டுகளாக அங்கீகாரத்தைத் தடுத்து நிறுத்திய நாடுகளையும் பற்றிய தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த ஆண்டு இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து, ஆகஸ்ட் 15, 1947 அன்று நாடு சுதந்திரம் பெற்று, இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாக மாறியது. சுதந்திரம் மில்லியன் கணக்கானவர்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் கொண்டு […]

அமெரிக்காவின் அதிரடி வரிவிதிப்புக்கு பயந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி வைத்தால் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதும் உலக நாடுகளுக்கு பல்வேறு வகையிலான வரிகளை விதித்து வருகிறார். அந்த அடிப்படையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தனியாக அபராதம் […]

இந்தியா மீது 25 சதவீத வரி விதிக்கும் தனது முடிவின் பின்னணியில் பிரிக்ஸ் குழு மற்றும் இந்தியாவுடனான மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக, அமெரிக்கா தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “நாங்கள் தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கிறோம், இதில் பிரிக்ஸ் பிரச்சினையும் அடங்கும்” என்றும் கூறினார். பிரிக்ஸ் அடிப்படையில் […]

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், மின்சார விமானங்கள் குறைந்த விலையில் விமானப் பயண வசதியைப் பெறும் என்ற புதிய நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். உலகளவில் நிகழும் பதற்றங்கள் காரணமாக இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன. இந்தநிலையில், பயணிகள் மலிவு விலை மற்றும் நிலையான பயண விருப்பங்களைத் தேடுகிறார்கள். இதுபோன்ற […]