திருத்தணி அதிமுக MLA கோ.அரியின் கட்சிப் பதவி பறிப்பு.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் இபிஎஸ்..! 

Eps

தமிழக சட்டசபையில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவை சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, கட்சியின் கொறடாவை மீறி தவெகவுக்கு ஆதரவளித்தால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்


அதாவது, தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் என மொத்தம் 29 பேரை அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கியுள்ளார். மேலும், புதிய மாவட்டச் செயலாளர்களையும் நியமித்துள்ளார். இந்த நிலையில், சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ.வான திருத்தணி கோ.அரியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொறுப்பிலும் இருந்த திருத்தணி கோ.அரி, எம்.எல்.ஏ. இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைபோல கடலூர் வடக்கு மாவட்டம், கடலூர் மாநகரக் கழகச் செயலாளர் பொறுப்பில் கடலூர் சி.கே.எஸ்.கார்த்திகேயன் (கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Read more: ‘திராவிடம்’ என்றால் என்ன..? தமிழக அரசியலில் இந்த சொல்லுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்..?

English Summary

Tirutani AIADMK MLA Ko.Ari’s party post is taken away.. EPS takes action in succession..!

Next Post

BREAKING| கேரளாவின் புதிய முதலமைச்சர் V.D. சதீசன்..! காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Thu May 14 , 2026
VD Satheesan to be next Kerala Chief Minister
VD Satheesan 1

You May Like