தவெக ஆச்சரியக்குறிகளே..! போய் ரீல்ஸ் போட்டு விளையாடுங்க.. இதெல்லாம் செட் ஆகாது.. பங்கம் செய்த அதிமுக IT விங்..!

cm vijay horse trade admk

அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர்.. இதனால் தமிழகத்தில் இதுவரை இல்லாத கேவலமான குதிரை பேர அரசியலை முதல்வர் விஜய் செய்துவருதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.. அதிமுகவில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது..


தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இயங்கி வருகிறது.. எனவே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்ய தவெக அரசு நினைக்கிறதாம்.. எனவே அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களை தவெகவில் இணைக்க திட்டமிட்டுள்ளதாம்.. அப்படி அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யும் போது அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்ய தவெக நினைப்பதாகவும் கூறப்படுகிறது..

இந்த நிலையில் தவெகவின் குதிரை பேர அரசியலை அதிமுக ஐடி கடுமையாக விமர்சித்துள்ளது.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவில் “ தவெக ஆச்சரியக்குறிகளே! இப்பதான் First Time Government Form பண்ணி சீட்ல உக்காந்திருக்கீங்க.. அதுக்குள்ள 50 வருஷ வரலாறு இருக்குற அதிமுக-வ பாத்து விரல் நீட்டுறதா? தலைமை செயலகத்துல சபாநாயகரை பாத்து முறைப்படி ராஜினாமா லெட்டர் குடுக்கலாம்.. ஆனா ராஜினாமா செஞ்ச அடுத்த நிமிஷமே உங்க அமைச்சரை பாத்து இணைப்பு விழா நடத்தக் கூடாது!

தார்மீகப் பொறுப்புன்னு சொன்னா சபாநாயகர் கிட்ட போயிருக்கணும், அமைச்சர எதுக்கு சந்திக்கணும்? ​இதான் நீங்க சொல்ற சுயவிருப்பமா? இல்ல, பதவி + பவர் காமிச்சு பின்னால நடந்த Backdoor Deal-ஆ? குதிரை பேரம் இப்போ க்ளியரா மக்களுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு பாஸ்!

தேர்தல்ல ஜெயிக்கிறதும் தோக்குறதும் சகஜம் தான்.. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,
புரட்சித்தலைவி அம்மா காலத்துல இருந்து எத்தனையோ சரிவை சந்திச்சு ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மாஸா Comeback குடுத்த வரலாறு எங்களுக்கு இருக்கு. கட்சி ஆரம்பிச்சு இப்பதான் 1st கியர் மாத்தியிருக்கீங்க.

உங்க கொள்கை என்ன, நீங்க மக்களுக்கு என்ன பண்ணப் போறீங்கன்றத மட்டும் பாருங்க. அதை விட்டுட்டு அரை நூற்றாண்டு காலமா மக்கள் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்க அதிமுக-வ சீண்டிப் பார்த்து Cheap Publicity தேடாதீங்க.

​ஆட்சிக்கு வந்ததுல இருந்து இதுவரை நடந்த பிரச்சனைகள் எதுக்குமே மக்களை சந்தித்து பதில் சொல்ல கொஞ்சம் கூட துணிவில்லாத உங்க தலைவரை வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம் உங்களுக்கு. இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது. போங்க போங்க ..போய் reels போட்டு விளையாடுங்க பாஸ்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம்..! பரபரப்பான அரசியல் சூழலில் அதிரடி முடிவு..!

English Summary

The AIADMK IT wing has severely criticized the TVK’s politics of horse-trading.

RUPA

Next Post

அரசு கேரண்டியுடன் மாதாந்திர வருமானம்.. பாதுகாப்பான முதலீட்டை தேடுபவர்களுக்கு அருமையான திட்டம்..!

Tue May 26 , 2026
Monthly income with government guarantee.. A great plan for those looking for a safe investment..!
Post Office Investment

You May Like