இன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் 2026 போட்டிக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி தனது மட்டையைத் தீட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கிரிக்கெட்டின் எல் கிளாசிகோ எனும் இப்போட்டியில் எம்.எஸ். தோனி மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடை தசைநார் காயம் காரணமாக எம்.எஸ். தோனி ஐபிஎல் 2026 தொடரில் இருந்து விலகியுள்ளார், மேலும் சிஎஸ்கே அணிக்காக முதல் ஆறு போட்டிகளையும் தவறவிட்டார். தங்களது நட்சத்திர வீரர் அணியில் இல்லாததால், அந்த அணி ஃபார்மை மீட்டெடுக்கத் திணறி வருகிறது. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான மோதலில் அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைரலான அந்த வீடியோவில், எம்.எஸ். தோனி தனது மட்டையின் பின்பக்கத்தை, சாண்டர் போன்ற கையடக்க மின்சாரக் கருவியைக் கொண்டு சீர் செய்கிறார். ஐபிஎல் புதிய விதிகளின்படி, போட்டியில் பயன்படுத்தப்படும் மட்டைகள் அனைத்தும் கள நடுவர்கள் சோதனை செய்யும் ‘பேட் கேஜ்’ கருவியில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அந்த கருவி மூலம் மட்டையின் தடிமன் மற்றும் அளவுகள் விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளதா என்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.
நடுவர்கள் பயன்படுத்தும் ‘பேட் கேஜ்’ அளவுகோலில் மட்டை தேர்ச்சி பெறும் வகையில், தோனி சாண்டர் கருவியின் உதவியுடன் மட்டையைச் சீர் செய்து வருவது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த சீசனில் விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால், சோதனையில் தோல்வியடைந்த மட்டைகளை பயன்படுத்த வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. இதனால், போட்டிக்கு முன்பே தனது மட்டை விதிகளுக்கு உட்பட்டதா என்பதை உறுதி செய்வதில் தோனி எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது.
Read more: வெள்ளை கோட் சூட்.. முதல் ஆளாக வாக்களித்தார் நடிகர் அஜித்..!



