கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. கொலை செய்ய மனைவி போட்ட திட்டம்!

WhatsApp Image 2026 10 25 at 12.21.43 PM 1

கர்நாடகாவில் வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய பெண், அதற்குத் தடையாக இருந்த தனது கணவரைக் கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் நடைபயிற்சிக்குச் சென்ற நேரத்தைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட இந்தக் கொலை, போலீசாரின் சிசிடிவி ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


விஜயபுரா மாவட்டம் ஏகதா நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (42). இவரது மனைவி அஸ்வினி. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், இந்தத் தம்பதிக்கு 6 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். அண்மையில் இவர்கள் புதிய வீடு ஒன்றைக் கட்டியுள்ளனர். அந்த வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணிக்கு வந்த ஆனந்த் என்பவருடன் அஸ்வினிக்குப் பழக்கம் ஏற்பட்டது. தனக்குத் திருமணமாகவில்லை என ஆனந்த் கூறியதை நம்பிய அஸ்வினி, அவருடன் காதல் உறவில் இருந்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பிய நிலையில், ராஜசேகர் உயிருடன் இருந்தால் அது சாத்தியமாகாது எனக் கருதியுள்ளனர். இதனால் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சதியை நிறைவேற்ற ஆனந்த் தனது நண்பர் சச்சின் மற்றும் சிறுவன் ஒருவரின் உதவியைப் பெற்றுள்ளார். கொலைக்காக அவர்களுக்குப் பணம் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அதிகாலை ராஜசேகர் வழக்கம்போல் நடைபயிற்சிக்குப் புறப்பட்டுள்ளார். அவர் சென்ற தகவலை அஸ்வினி ஆனந்துக்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து நம்பர் பிளேட் இல்லாத ஸ்கார்பியோ காரில் வந்த சச்சின் மற்றும் சிறுவன், ராஜசேகர் மீது காரை மோதிக் கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர்.

கணவர் வாகனம் மோதி உயிரிழந்ததாக அஸ்வினி காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், ஆரம்பத்தில் இந்தச் சம்பவம் சாலை விபத்தாகவே பார்க்கப்பட்டது. ஆனால், சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசாருக்கு, ராஜசேகரை ஒருவர் பின்தொடர்ந்த காட்சி சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து வழக்கின் விசாரணை கொலை கோணத்தில் திரும்பியது.

அஸ்வினியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். அப்போது கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதை அவர் ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அஸ்வினி, அவரது காதலன் ஆனந்த், சச்சின் மற்றும் சிறுவன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கணவரின் மரணத்தை விபத்தாகக் காட்டி போலீசாரைத் திசைதிருப்ப முயன்ற சம்பவம் விஜயபுரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “புருஷன் போனா என்ன, நான் இருக்கேன்!” கணவர் மீது புகார் கொடுக்க வந்த பெண்.. ஏமாற்றி கர்ப்பமாக்கிய போலீஸ் ஏட்டு!

Saranya

Next Post

12 நாட்களாகியும் கிடைக்காத 7 வயது சிறுமி.. அதிகாலையில் கேட்ட “அம்மா.. அம்மா” குரல்! செஞ்சி சிறுமி வழக்கில் நடந்தது என்ன?

Sun Oct 25 , 2026
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமாவதி மாயமான வழக்கில், அவர் சென்ற இடம் குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. சிறுமி காணாமல் போன அன்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் கேட்டதாக அண்டை வீட்டுப் பெண் அளித்த தகவலும், கண்காணிப்பு கேமராக்களில் சிறுமி கிராமத்தை விட்டு வெளியேறிய காட்சி கிடைக்காததும் விசாரணையில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் […]
a67c6423e557145109a3a4b9e9c418f5 1

You May Like