“புருஷன் போனா என்ன, நான் இருக்கேன்!” கணவர் மீது புகார் கொடுக்க வந்த பெண்.. ஏமாற்றி கர்ப்பமாக்கிய போலீஸ் ஏட்டு!

WhatsApp Image 2026 10 25 at 12.13.13 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில், கணவர் மீது புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்ற பெண்ணிடம் திருமணமானதை மறைத்து பழகி, குழந்தை பிறந்த பின்னர் அவரைக் கைவிட்டதாக போலீஸ் ஏட்டு மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சாம்சன் என்ற ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


கருங்கல் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு குடும்பப் பிரச்சினை காரணமாகக் கருங்கல் காவல் நிலையத்துக்கு வந்தபோதுதான் சாம்சனுடன் அந்தப் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவர் செலவுக்குப் பணம் அனுப்பாமல் துன்புறுத்துவதாக அவர் அப்போது புகார் அளிக்கச் சென்றிருந்தார்.

இந்தச் சூழலைத் தொடர்ந்து, சாம்சன் அந்தப் பெண்ணுடன் நெருக்கமாகப் பழகியுள்ளார். தனக்குத் திருமணமானதை மறைத்து, அவரைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்ததாகப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த உறவில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னரே சாம்சனுக்கு ஏற்கெனவே திருமணமானது பெண்ணுக்குத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அந்தப் பெண்ணை விட்டு விலகியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சாம்சன் மீது புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சாம்சன் தலைமறைவான நிலையில், அவரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கணவர் மீதான புகாருடன் காவல் நிலையத்தை நாடிய பெண்ணுக்கே, அங்கு பணியாற்றிய போலீஸ் ஏட்டால் இந்த நிலை ஏற்பட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் விபரீதம்.. மனைவியைக் கொன்று உடலை வீசிய கணவன்!

Saranya

Next Post

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. கொலை செய்ய மனைவி போட்ட திட்டம்!

Sun Oct 25 , 2026
கர்நாடகாவில் வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய பெண், அதற்குத் தடையாக இருந்த தனது கணவரைக் கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் நடைபயிற்சிக்குச் சென்ற நேரத்தைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட இந்தக் கொலை, போலீசாரின் சிசிடிவி ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விஜயபுரா மாவட்டம் ஏகதா நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (42). இவரது மனைவி அஸ்வினி. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், இந்தத் தம்பதிக்கு 6 […]
WhatsApp Image 2026 10 25 at 12.21.43 PM 1

You May Like