தேசிய செய்திகள்

சினிமா 360°

  • விஷாலுக்கு காய்ச்சல் வர அந்த பக்கவிளைவுதான் காரணம்!. ஆதாரத்துடன் பகீர் கிளப்பிய சுச்சி!.

    அந்த காலகட்டத்தில் இண்டர்நெட் பயன்பாடு பெரியளவில் இல்லாததால் சுச்சியின் நிகழ்ச்சி தான் நாட்டுநடப்புகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வந்தது. ரேடியோவில் சுச்சியின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது. வெறும் 22 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த சுசித்ரா, ஒரே வருடத்தில் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனதால் அவருக்கு ஒரு லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாம். அதுவும் 2004-05 காலகட்டத்திலேயே ரேடியோவில் பேசி லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார் சுச்சி.

    ரேடியோவில் வேலை பார்க்கும் போதே சிம்புவுடன் சேர்ந்து மன்மதன் படத்தில் என் ஆசை மைதிலியே பாடலை பாடினார் சுச்சி. அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதை தொடர்ந்து கந்தசாமி, போக்கிரி போன்ற படங்களில் பாடினார் சுச்சி. அதுமட்டுமின்றி கந்தசாமி படத்தில் ஸ்ரேயாவுக்கு டப்பிங் கொடுத்ததும் சுசித்ரா தான். இப்படி ஆர்.ஜே.வாக மட்டுமின்றி பாடகியாகவும் உச்சத்தில் இருந்தார் சுசித்ரா. இதுதவிர ஸ்டேஜ் ஷோக்களையும் பண்ணியுள்ளார் சுசித்ரா, அதற்காக ஒரு ஷோவுக்கு ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம்.

    இப்படி உச்சத்தில் இருந்த சுசித்ராவின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டது சுச்சி லீக்ஸ். 4 லட்சம் பாலோவர்களை கொண்ட அவரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து கோலிவுட் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் கசியவிடப்பட்டன. இதனால் சில மாதங்கள் பரபரப்பாக பேசப்பட்ட அவர் பின் ஆள் அட்ரஸே தெரியாமல் போனார். பின்னர் பிக்பாஸில் கலந்துகொண்டார். மீண்டும் ஆர்.ஜே.வாக பணியாற்ற தொடங்கி சாத்தான்குளம் விவகாரம் பற்றியும் ஆங்கிலத்தில் இவர் பேசி வெளியிட்ட வீடியோ மிகவும் வைரல் ஆனது.

    சுச்சி லீக்ஸ் மூலம் தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, அனுயா போன்ற திரைப்பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட்டையே கதிகலங்க வைத்தன. பின்னர் கணவர் கார்த்திக் குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் சுச்சி. அதுவும் சமீப கலமாக அவர் அளிக்கும் பேட்டிகளில் விஜய் தொடங்கி திரிஷா, கமல்ஹாசன் என உச்ச நட்சத்திரங்களை பற்றி பல்வேறு அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதுவும் கமல்ஹாசனின் பர்த்டே பார்ட்டியில் தாம்புல தட்டில் வைத்து போதைப்பொருள் பரிமாறப்பட்டதாக கூறி இருந்தார் சுச்சி.

    இந்தநிலையில் தமிழ் தரையுலகில் தற்போது, போதைப்பொருள் பயன்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. பிரபல நடிகர்கள் வலையில் சிக்கி வருகின்றனர். இதுதொடர்பாக பாடகி சுச்சிதா பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகிறது. ஒருகாலத்தில் சுச்சித்ராவும் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருக்கிறார் என்றெல்லாம் பல விஷயங்கள் உலா வந்தன. இதை பற்றி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் தெளிவுப்படுத்தியிருக்கிறார். முதன் முதலில் சுசித்ரா மீது கேஸ் கொடுத்தது திரிஷா மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன்தானாம்.

    அதுமட்டுமில்லாமல் தனுஷ் , கார்த்திக்குமார், விஜய்ஜேசுதாஸ் என ஒரு நான்கு பேர் சேர்ந்துதான் சுசி லீக்ஸை வெளியிட்டார்களாம். அது சுசித்ராவுக்கே தெரியாதாம். இதோடு அவர் போதை பொருளுக்கு அடிமையானார் என்று கேஸ் கொடுத்ததும் போலீஸ் அவருடைய வீட்டிற்கு வந்துவிட்டார்களாம். எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் எல்லாவற்றையும் போலீஸ் கையகப்படுத்திவிட்டார்களாம். நல்ல வேளையாக லேண்ட் லைன் போன் மட்டும் உபயோகத்தில் இருந்ததாம்.

    அப்போது சன் டிவியில் இருந்து சுசித்ராவை தொடர்பு கொண்டு பேசிய போது ‘ நான் செய்யவில்லை’ என்ற ஒரு ஸ்டேட்மெண்ட்டை மட்டும் தன்னால் கொடுக்க முடிந்தது என்று சுசித்ரா கூறினார். மேலும் இதற்கு முன்னரே தமிழ் சினிமாவில் நிறைய பேர் கொக்கைன் பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னதும் ஆதாரம் இருக்கிறதா என்று சுசித்ராவிடம் பல பேர் கேட்டார்கள். ஆனால் அது முட்டாள்தனமான கேள்வி. ஆதாரம் இருக்கப் போய்தான் இவ்வளவு வெளிப்படையாக சொல்கிறேன். ஆதாரம் என்பது ஒரு வேளை நான் இக்கட்டான சூழ் நிலையில் மாட்டிக் கொண்டால் நீதிமன்றத்தில் இதை காட்டி நான் தப்பித்துக் கொள்வதற்காகத்தான் வைத்திருப்பேன்.

    இதை போய் எல்லாரிடமும் காட்ட வேண்டும் என்று அவசியமில்லை என்று சுசித்ரா கூறினார். அதன் பிறகு போலீஸ் என்னிடம் ‘வீட்டில் ஏதும் பொருள் இருக்கா? இருந்தால் கொஞ்சம் அப்புறப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ரெய்டு வருகிறது’ என்று சொன்னார்களாம். எந்த போலீஸாவது இப்படி சொல்வார்களா? உடனே நான் ‘என் வீட்டில் அப்படி எதுவும் கிடையாது. சிகரெட் பிடிப்பேன். அதனால் சிகரெட் பாக்கெட்கள் இருக்கும்’ என்று சுசித்ரா சொல்லியிருக்கிறார்.

    அதன் பிறகு இரண்டு மணி நேரம் தேடுதலுக்கு பிறகு சுசித்ரா வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை. அப்போதும் சுசித்ரா ‘என்கிட்ட நிறைய ஆதாரம் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன் பாருங்க’ என சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் தனுஷ் கார்த்திக் குமார் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள் என்றும் சுசித்ரா கூறினார். மேலும் நடிகர்கள் ஒரு போதையில் இருந்தால் இந்த ரசிகர்கள் ஸ்டார் போதையில் இருக்கிறார்கள். நடிகர்கள் என்ன சொன்னாலும் அதை ரசிகர்கள் அப்படியே நம்பி விடுகிறார்கள்.

    விஷாலுக்கு வந்தது வெறும் ஜுரம்தான். வேறு ஒன்னுமில்லை. அதான் அவரால் பேசமுடியவில்லை. கை நடுங்குகிறது. கீழே விழுகிறார். சின்னக் குழந்தைகளுக்கு ஜுரம் வந்தாலே போய் பரீட்சை எழுதி விட்டு வருகிறார்கள். இவர்கள் ஜுரம்னு சொல்வாங்களாம். அதை ஆடியன்ஸும் நம்புகிறார்கள். இதெல்லாம் அதோட பக்கவிளைவுதான் காரணம் என சுசித்ரா கூறினார்.

    Readmore: ஸ்ரீகாந்த் பலியாடுதான்!. மெயின் வில்லன் இந்த நடிகர்தான்!. மிகப்பெரிய நெட்வொர்க்கே இருக்காம்!. போட்டு உடைத்த பாடகி சுசித்ரா!.

உலகம்

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலரும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு அளித்துள்ளார். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். […]

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம் 1: இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திராவிட மாடல் அரசு தொடர்ந்திடவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும், கழகம் எடுத்த முடிவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைபிடிப்பது […]

சாக்லேட் சாப்பிடுவதை விரும்புபவர்கள் பலர் இருக்கிறார்கள். இருப்பினும்.. சாக்லேட்டுகளில் உள்ள சர்க்கரை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், டார்க் சாக்லேட் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த டார்க் சாக்லேட்டில் அதிக கோகோ உள்ளடக்கம் உள்ளது. இதில் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. அவை பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. இந்த டார்க் சாக்லெட்களை தினமும் […]

விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்ற காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோவிலில் 28 வயதான அஜித் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் இருந்து நிக்தா என்பவரும் அவருடைய தாயார் சிவகாமியும் மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோயிலுக்கு வந்ததும் தனது காரை ஓரமாக பார்க் செய்யுங்கள் என்று கூறி அஜித்திடம் […]

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது. சிங்களப் படையினரின் அத்துமீறல் நடப்பாண்டிலும் தொடராமல் தடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக […]

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் பாகிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் தாலிபான் என்ற தனி அமைப்பு இந்த தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில், ராணுவ வாகனங்கள் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை தற்கொலைப் படைத் தீவிரவாதி மோதியதில், ராணுவ […]

தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணத்தை 3.16 சதவீதம் உயர்த்தும் வகையில் புதிய கட்டண விகிதங்களுடன் கூடிய ஆணையை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாரித்துள்ளது.  தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூலித்து வருகிறது. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் […]

மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டு அதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் […]

பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்கு ரதங்கள் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு 9 நாட்கள் வழிபாட்டுக்குப் […]

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த குற்றப் பின்னணி உள்ள சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருவ இருப்பதாக கடலோரக் காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரையிலான பகுதிகளில் கடலோர காவல் […]