BREAKING | நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்..!! விரைந்து மீட்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

CM Vijay Nepal 2026

நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் நிலையங்கள், சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நேபாள அரசுடன் இணைந்து இந்தியாவும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


இந்நிலையில், முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்த பேரிடரில் காணாமல் போன தமிழகத்தை சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழகத்தை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Read More : பீகார், உ.பி. மாநிலங்களை நெருங்கும் நேபாள பெருவெள்ளம்..!! மத்திய அரசு ‘ஹை அலர்ட்’..!!

Next Post

BIG BREAKING | செப்.1ம் தேதி மேட்டூர் அணை திறப்பு..!! தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Wed Aug 26 , 2026
காவிரி படுகை பாசனத்திற்காக மேட்டூர் அணை செப்.1ம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தாமதமானதாலும், கர்நாடக அரசிடமிருந்து உரிய நீர் கிடைக்காததாலும் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உரிய தேதியில் தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் டெல்டா விவசாயிகள் […]
Mettur Dam CM Vijay 2026

You May Like