ஸ்டாலின் மிசாவில் தான் கைதானாரா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியுமா? என்று உதயநிதிக்கு தவெக சவால் விடுத்துள்ளது. இதுதொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”அரசியலாகவும், கருத்தியல் ஆகவும் மோதும் வக்கும் திராணியும் இல்லையென்றாலும், வாய்ச்சவடால் விடுவதில் மட்டும் ஆபாசநிதிக்கு குறையொன்றுமில்லை. மிசாவில் கைதானவர் அப்பா என்று திமுகவினரும், திமுகவின் அடிவருடிகளும் உருட்டுவதற்கு, இது தாத்தா காலம் என்றெண்ணி வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியிருக்கிறார் உளறல்நிதி. என்ன […]

கர்நாடகாவில் 3 தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த கொடூர செயல் கடும் கண்டனத்துக்குரியது. குற்றம் இழைத்தவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாக தெரிகிறது. இதனை […]

அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்திற்குள் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை கொண்டாடி, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வீடியோவை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக பதிவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட அரசியல் சார்ந்த நிகழ்வுகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை கடுமையான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்துள்ளது. இந்த நடைமுறையை மீறி, தேனி மாவட்டம் பெரியகுளம் […]

பான் மசாலாவை மறைமுகமாக விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகிய 3 பேருக்கும் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, அதாவது FDA நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு விமல் ஏலக்காய் விளம்பரத்தில் இந்த 3 நடிகர்களும் நடித்திருந்தனர். விமல் என்ற பிராண்ட் பெயர் பான் மசாலாவுடன் சந்தையில் பரவலாக தொடர்புபடுத்தப்படுவதால், ஏலக்காய் விளம்பரமும் பான் மசாலாவை மறைமுகமாக […]

தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 2 முக்கிய அமைச்சர்களின் செயல்பாடுகள், முதல்வர் விஜய்க்கு அரசியல் ரீதியாக புதிய தலைவலியை ஏற்படுத்தக்கூடும் என்ற பேச்சு டெல்லி அரசியல் வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளது. இதில் ஒரு அமைச்சர் மீது தொடக்கத்திலேயே ஊழல் புகார்கள் எழ தொடங்கியுள்ள நிலையில், மற்றொரு அமைச்சர் மத்திய அரசையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தொடர்ந்து காட்டமாக விமர்சித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் […]

உணவு உற்பத்தி, சுற்றுலாப் பாதுகாப்பு, இயற்கை எழில் மற்றும் சர்வதேச பயண வலிமை எனப் பல்வேறு துறைகளில் உலக அளவில் தனித்துவமான சாதனைகளை படைத்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள நாடுகளின் முக்கிய பட்டியல்கள் வெளியாகியுள்ளன. தென் அமெரிக்க நாடான கயானா, ‘நேச்சர் புட்ஸ்’ அமைப்பின் சர்வதேச ஆய்வில் உலகின் 186 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி உணவுத் தன்னிறைவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்நாடு தனது குடிமக்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்துத் […]

இன்று வறண்டு கிடக்கும் உலகின் மிகப்பெரிய சகாரா பாலைவன பகுதியில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவின் 5 பெரும் ஏரிகளை விட பிரம்மாண்டமான நன்னீர் ஏரி ஒன்று பரந்து விரிந்திருந்ததாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 3.61 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் கம்பீரமாகக் காட்சியளித்த அந்தப் பிரம்மாண்ட ‘மெகா-சாட்’ (Mega-Chad) ஏரி, காலப்போக்கில் ஏற்பட்ட பருவநிலை மாற்றங்களால் சுருங்கி, தற்போது ஆப்பிரிக்காவின் சாட், நைஜர், நைஜீரியா […]

தருமபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் குடும்பப் பிரச்சனையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, அந்தரங்கப் படங்களை வைத்து மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான திருமணமான கல்லூரி மாணவிக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனை தீர்த்து வைப்பதாக கூறி, கணவரின் நண்பரான ரகுராம் என்ற கோவில் பூசாரி அப்பெண்ணிடம் […]

மனித வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியும் தீராத கடன் சுமைகளும் ஒருவரது மன அமைதியை சீர்குலைத்து, நிம்மதியை இழக்க செய்யும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. இத்தகைய இன்னல்களில் இருந்து மீள்வதற்கும், இக்கட்டான சூழலை எதிர்கொள்ள தேவையான மன வலிமையை பெறுவதற்கும் ஆன்மீக ரீதியாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகுந்த பலனைத் தரும் என்பது இந்து சமய நம்பிக்கையாகும். குறிப்பாக, ஆன்மீக செம்மல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் அருளப்பட்ட எளிய துதிப் […]

தமிழ் பஞ்சாங்கத்தின் ஐந்தாவது மாதமான ஆவணி மாதம் ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பல்வேறு சிறப்புகளை கொண்ட ஒரு மங்கலகரமான மாதமாக கருதப்படுகிறது. நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் தனது சொந்த வீடான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமாகவும், தடைகளை தகர்க்கும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் மாதமாகவும் இது திகழ்கிறது. அத்துடன், காயத்ரி ஜெபம் உள்ளிட்ட இறை வழிபாடுகளுக்கு உகந்த இந்த […]