விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் மற்றும் தங்க நகை வாங்குவதற்காக, தங்களுக்குப் பிறந்த ஒரு மாத ஆண் குழந்தையை ரூ.1.2 லட்சத்திற்கு பெற்றோர் விற்ற கொடூர சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரிடம் கைமாறிய அந்த குழந்தை ஹைதராபாத்தில் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பெற்றோர் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள முகுந்த்வாடி பகுதியில் வசித்து வந்த தம்பதி, […]
ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 4×400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. கிரண் பஹல், பிராச்சி சவுத்ரி, எம்.ஆர். பூவம்மா மற்றும் வித்யா ராம்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, வாழ்க்கையில் பல கடுமையான போராட்டங்களைக் கடந்து வந்து இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. கிரண் பஹலைப் பொறுத்தவரை, அவர் தடகளப் போட்டிகளில் பங்கேற்பது […]
உக்ரைன் மற்றும் ஈரான்-வளைகுடா பகுதிகளில் நிலவி வரும் மோதல்களால், தானியங்கள் மற்றும் உரங்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் மாதங்களில் உலகம் முழுவதும் ‘பெரும் உணவு நெருக்கடி’ ஏற்பட வாய்ப்புள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார். திங்களன்று நியூயார்க்கில் உள்ள ‘ஆசியா சொசைட்டி’ (Asia Society) அமைப்பு நடத்திய உரையாடல் நிகழ்வில் பேசிய அவர், உக்ரைன் மற்றும் தற்போதைய ஈரான்-வளைகுடா மோதல்கள், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் […]
கடந்த இரு தசாப்தங்களாக இந்திய கிரிக்கெட்டின் இரு பெரும் தூண்களாக திகழும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் கூட்டணி, ரசிகர்களால் ‘Ro-Ko’ என அன்போடு அழைக்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, விராட் கோலியுடனான தனது பிணைப்பு, ‘Ro-Ko’ என்ற பெயரின் பின்னணி மற்றும் 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான தங்களது அணுகுமுறை குறித்து ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார். சமூக […]
உக்ரைனுக்கு எதிரான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ படைபலத்தை மேலும் 15,500 வீரர்களாக உயர்த்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதிய அவசர சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். செப்டம்பர் 28 நேற்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் மூலம், ரஷ்ய ஆயுதப் படைகளின் மொத்த படைபலம் 24,41,630 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் நேரடி ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 15,50,500 ஆகும். இதற்கு முன் ராணுவ வீரர்களின் […]
ஹாலிவுட் மற்றும் ஹாங்காங் திரைப்பட உலகப் புகழ்பெற்ற சண்டைக்கலை நட்சத்திரமான ஜாக்கி சான் காலமானதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 71 வயதாகும் ஜாக்கி சான் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் உள்ளார். இணையத்தில் பரவிய வதந்தி: ஜாக்கி சானின் புகைப்படத்துடன் “1954 – 2026” என்று குறிப்பிடப்பட்ட கருப்பு-வெள்ளை போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஒரே நாளில் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் […]
பொதுவாக புற்றுநோய் என்றாலே மரபணுக்கள், புகையிலை பயன்பாடு, காற்று மாசுபாடு, மதுபானம், தவறான உணவுப் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால்தான் ஏற்படுகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று முற்றிலும் மாறுபட்ட ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ‘தி லான்செட் ஆன்காலஜி’ (The Lancet Oncology) மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, உலகளவில் கண்டறியப்படும் புதிய புற்றுநோய் பாதிப்புகளில் 12% (அதாவது 8-ல் […]
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை, போட்டியை நடத்தும் நகரங்களில் ஒன்றான கேப் டவுனில் வியாழக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இந்த அறிவிப்புடன் சேர்த்து உலகக்கோப்பைக்கான ஓராண்டு கவுண்டவுனும் முறைப்படி தொடங்குகிறது. முன்னதாக வெளியான தகவல்களின்படி, 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2, 2027 அன்று தொடங்கி, நவம்பர் 21, 2027 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உலகக்கோப்பையில் […]
இரவில் தூக்கம் வராமல் தவிப்பதையோ அல்லது நள்ளிரவில் விழிப்பு வந்து மீண்டும் தூங்க முடியாமல் போவதையோ பலர் சாதாரண விஷயமாக கடந்துபோய் விடுகிறார்கள். ஆனால், தொடர்ச்சியான தூக்கமின்மை பிரச்சினை (Insomnia) வெறும் சோர்வை மட்டும் தருவதில்லை; அது மூளை ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த உடல்நலத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. ‘ஸ்லீப் மெடிசின் ரிவியூஸ்’ (Sleep Medicine Reviews) இதழில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான ஆய்வுத் தொகுப்பில், […]
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ல் மகளிர் ட்ராப் (Trap) துப்பாக்கி சுடுதல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று நீரு தண்டா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். தகுதிச்சுற்று மற்றும் இறுதிப்போட்டி இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், சீனாவின் சன் யுனாங் மற்றும் குவைத்தின் ஹஜார் அப்துல்மாலிக் ஆகியோரை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். தொடர் மழையின் காரணமாக நிலவிய கடினமான சூழ்நிலையிலும் நேர்த்தியாக செயல்பட்ட நீரு தண்டா, […]

