சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை காலை அரசுப் பேருந்துகளில் ஏறி பெண்களுக்குப் இலவசப் பேருந்துப் பயணச் சீட்டுகளை வழங்கினார். தமிழகத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஆட்சியமைத்த விஜய் தலைமையிலான அரசால் விரிவுபடுத்தப்பட்ட “வெற்றி பயணம்” திட்டத்தின் தொடக்கமே இந்த நிகழ்வாகும். பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இந்த இலவசப் பேருந்து சேவை விரிவாக்கமானது, முந்தைய அரசு செயல்படுத்திய பிரபலமான திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதோடு, […]

ரஷ்யாவின் எல்லை மற்றும் தன்னாட்சிப் பகுதிகள் மீது நேரடித் தாக்குதல் தொடுக்கப்பட்டால், தங்களின் வசம் உள்ள அணு ஆயுதங்கள் உட்பட அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயங்க மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். குறிப்பாக, பால்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் முக்கிய ராணுவ மையமான கலினின்கிராட் பகுதியை NATO நாடுகள் தனிமைப்படுத்தவோ அல்லது தாக்குதல் நடத்தவோ முயன்றால், அதற்குப் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று […]

ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரின் 13-வது நாளில் இந்திய விளையாட்டு வீரர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைப் படைத்துள்ளனர். ஒரே நாளில் 6 தங்கப் பதக்கங்களைக் குவித்து அசத்திய இந்தியப் படை, பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறித் தனது முத்திரையைப் பதித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் தொடக்கத்தில், மகளிருக்கான ரீகர்வ் வில்வித்தை அணி இறுதிப்போட்டியில் வலுவான தென் கொரியாவை வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது. […]

ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மகளிர்க்கான குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சீன தைபே வீராங்கனை சென் நியென்-சின் (Chen Nien-chin) என்பவரை வீழ்த்தி பர்வீன் இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார். எதிராளியின் அனுபவத்திற்கு சற்றும் சளைக்காமல் களத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பர்வீன், அபாரமான […]

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ (Sigma) திரைப்படம் அக். 2 இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பலமுறை தள்ளிப்போன இந்தப் படத்திற்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் திரையரங்கிற்கு நேரடியாக வந்து அவருக்குத் தங்களது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தனர். சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்ற முதல் நாள் முதல் காட்சி திரையிடலின் போது, ஜேசன் சஞ்சய்யை […]

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் “வெற்றிப் பயணம்” திட்டத்தை அக்டோபர் 2 இன்று முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். தொடக்க விழாவில் பயணிகள் மற்றும் பெண்களிடம் நேரடியாகக் கலந்துரையாடிய முதலமைச்சர் விஜய், பயனாளிகளுக்கு இலவசப் பேருந்து பயணச்சீட்டுகளை வழங்கி இத்திட்டத்தைத் தொடக்கி வைத்தார். இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம் தினமும் சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என அரசு […]

ஃப்ளைதுபாய் விமானத்தில் உதவி விமானியின் கொடூரத் தாக்குதலையும் மீறி, ஆபத்தான சூழலில் சாதுரியமாகச் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசி அவரது வீரத்தைப் பாராட்டினார். அபுதாபியில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் ஸ்மித் மச்சார், பிரதமருடனான வீடியோ அழைப்பின் போது தனது அனுபவங்களையும், அந்த இக்கட்டான தருணத்தில் தனக்கு தைரியம் அளித்த விஷயங்களையும் உணர்ச்சிப்பூர்வமாகப் […]

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கக் குவியலைத் தொடர்ந்து வருகின்றனர். மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இது நடப்பு ஆசிய விளையாட்டுத் தொடரில் இந்தியா கைப்பற்றும் 12-வது தங்கப் பதக்கமாகும். சுவாரஸ்யமான இந்த இறுதிப் போட்டியில் லவ்லினா போர்கோஹைன், சீனாவின் பாவோ ஜியியை […]

மெட்டா நிறுவனம் நேற்று (அக்டோபர் 1, 2026) முதல் வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்ஃபார்ம் பயன்பாட்டிற்கான புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் முறை மற்றும் அதற்குரிய செலவுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தீர்வு வழங்கி நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வாட்ஸ்அப் பிசினஸ் தளத்தைப் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த புதிய கட்டண விதிகள் பொருந்தும். புதிய கட்டண […]

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையை செலுத்தத் தவறினால், அதனை சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி யோசனை தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதால் மக்கள் உடனடியாக அபராதத்தைச் செலுத்துவார்கள் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மின்சாரக் கட்டணத்துடன் அபராதத்தைச் சேர்ப்பது, வாகனப் பறிமுதல் மற்றும் ஆன்லைன் சேவைகளை முடக்குவது வரை பல கடுமையான நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் […]