fbpx

உல்லாச உலகில் மிதந்த கள்ளக்காதல் ஜோடி, அறிவுரை கூறியும் கேட்கவில்லை….! இறுதியில் கர்ப்பிணி பெண்ணின் கணவருக்கு நேர்ந்த சோகம்…!

கள்ளக்காதல் விவகாரத்தில், ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, பிரச்சனையை தடுக்கச் சென்ற கர்ப்பிணி பெண்ணின் கணவர், கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே இருக்கின்ற, டொம்புச்சேரி கிழக்குத்தெருவில், அண்ணன், தம்பிகளான மருதமுத்து மற்றும் ராஜா உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். இதில் மருதமுத்துவின் மனைவி வீரலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன்(24) எனவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரிய வந்ததால், மருதமுத்து குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், பிரவீன் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையில், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஊர் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் பேசி, இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். ஆனாலும், வீரலட்சுமிக்கும், பிரவீனுக்கும் இடையில் கள்ளக்காதல் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது.

இவர்களின் கள்ளக்காதல் முடிவுக்கு வராததால், ஆத்திரம் கொண்ட மருதமுத்து, பிரவீனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அதோடு, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில் தான்,டொம்புச்சேரி பகுதியில் சமுதாயக்கூடம் அருகே மருதமுத்து மற்றும் பிரவீன் உள்ளிட்டோர் இடையே மறுபடியும் தகராறு ஏற்ப்பட்டிருக்கிறது. அப்போது மருதமுத்து பிரவீனை கத்தியால் குத்த முயற்சி செய்திருக்கிறார். இதனை மருதமுத்துவின் தம்பி ராஜா தடுக்க முயற்சி செய்கிறார். இந்நிலையில், அருகில் இருந்த தன்னுடைய வீட்டில் இருந்து, கத்தியை எடுத்து வந்து, பிரவீன், மருதமுத்துவை குத்த முயற்சித்து இருக்கிறார். மேலும், பிரவீனுக்கு ஆதரவாக, அவருடைய மைத்துனர் தினேஷ் குமார் (26) என்பவரும் மருதமுத்துவை குத்துவதற்கு முயற்சி செய்திருக்கிறார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, இவர்களை தடுக்க முயற்சி செய்த ராஜாவை, இருவரும் சரமாரியாக குத்தி இருக்கிறார்கள். இதில், கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ராஜா சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனைத் தொடர்ந்து, பிரவீன் மற்றும் தினேஷ் உள்ளிட்ட இருவரும், அந்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த ராஜா, உறவினர்கள் மூலமாக, ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ராஜாவிற்கு, சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. மேலும், அவருடைய மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மருதமுத்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் வழங்கியதை தொடர்ந்து, பிரவீனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தப்பிச் சென்ற மற்றொரு குற்றவாளியான தினேஷ்குமார், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அதன் பிறகு, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

உயிரிழந்த ராஜாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.

Next Post

”நீ யாருடா அவன் கூட படு** கூடாதுனு சொல்ல”..!! கணவனை ஸ்கெட்ச் போட்டு தீர்த்துக் கட்டிய மனைவி..!!

Tue Aug 29 , 2023
நாமக்கல் மாவட்டம் செல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (37). இவரது மனைவி பிரேமா (35). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி அதிகாலை பிரேமா காது வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, அவரை பெரியசாமி மோகனூர் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், பொய்யேரிக்கரை பகுதியில் சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவர் பெரியசாமி இறந்ததாக பிரேமா காவல் நிலையத்தில் […]

You May Like