விவசாயிகள் 3 பேர் உயிரிழந்த நிலையில் சங்க நிர்வாகிகளுடான பேச்சுவார்த்தையில் 2 நாட்கள் போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினர். அப்போதே குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஆனால், மத்திய அரசு அதை நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 13-ம் தேதி போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். கடந்த 12-ம் தேதி இரண்டு மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுவரை மொத்தமாக ஐந்து கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் டெல்லி முற்றுகை போராட்டம் 2 நாட்கள் ஒத்திவைக்கப்படுவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். விவசாயிகள் 3 பேர் உயிரிழந்த நிலையில் சங்க நிர்வாகிகளுடான பேச்சுவார்த்தையில் 2 நாட்கள் போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.