fbpx

பல மாணவிகளின் வாழ்வை சீரழித்த ஆசிரியர்….! ஐந்தாம் வகுப்பு மாணவியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன், காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை….!

பள்ளி மாணவிகள் பலரை, பாலியல் பலாத்காரம் செய்ததாக அருணாச்சலப் பிரதேசத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில், 50 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர், பல மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றம் தெரிந்த பின்னரும், பள்ளி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், பள்ளியின் முதல்வரும் கைது செய்யப்பட்டார் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து, காவல்துறையில் பெற்றோர்கள் வழங்கிய புகாரை அடிப்படையாக வைத்து, குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வரை காவல் துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக கைது செய்ததாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குற்றம் சுமத்தப்பட்ட நபர் 5 மற்றும் 6ஆம் வகுப்புகளில் இருக்கின்ற குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.

ஆகவே, அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு, மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. சென்ற வருடம் நவம்பர் மாதத்தில், ஷியோமி மாவட்டத்தில், இருக்கின்ற ஒரு பள்ளியில் விடுதி வார்டன் 6 சிறுவர்கள் மற்றும் 15 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

உலகக்கோப்பை 2023..!! இந்திய அணிக்கு இவர்தான் கேப்டனா..? வெளியான அறிவிப்பு..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Tue Sep 5 , 2023
உலகக்கோப்பை 2023 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த உலகக் கோப்பை தொடரானது சென்னை, பெங்களூரு, மும்பை, […]

You May Like