ஏ.ஆர். ரகுமானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு மருத்துவ அவசரநிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சாய்ராவின் உடல்நிலை குறித்த செய்தியை அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
பலரின் மனம் கவர்ந்த இசை அமைப்பாளர் என்றால் அது ஏ. ஆர். ரஹ்மான் தான். தனது மெய்சிலிர்க்க வைக்கும் இசையால், பலரை தன் பக்கம் ஈர்த்தவர் இவர். இந்நிலையில், கடந்த 2024 நவம்பர் 19 அன்று ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாயிரா பானு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவருக்கும் திருமணமாகி 29 வருடங்கள் ஆகும் நிலையில், இவர்களின் இந்த முடிவு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீண்ட காலமாக இருவருக்கும் இடையே உறவு சரியாக இல்லை என்றும், பரஸ்பர மரியாதை மற்றும் அன்பு இருந்தபோதிலும், ரஹ்மானும் அவரது மனைவியும் ஒன்றாக இருக்க முடியாது என்று நினைத்து அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.
இந்நிலையில், தற்போது சாயிரா பானு திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாயிரா பானுவுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது சாயிரா பானுவின் உடல்நிலை சீராக இருக்கும் நிலையில், மருத்துவர்கள் அவரை சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி கூறியுள்ளனர்.
உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்த சாயிரா பானு, முன்னாள் கணவர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதனுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நண்பர்கள், ரசூல் பூக்குட்டி மற்றும் மனைவி ஷாடியாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். எந்த காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை.
Read more: மறுமணம் செய்ய தயாராக இருக்கும் சமந்தா.. மாப்பிளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க!!