பேஸ்புக், இன்ஸ்டா பழக்கம் என்பது நிறைய முறை விபரீதமாகவே மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் நட்பாக பழகி, பின்னர் அவர்களுடன் நெருக்கமாகிறார்கள். அப்படி நெருக்கமானவர்களை கண் மூடித்தனமாக பெண்கள் அவர்களிடம் பணம், நகை அல்லது பாலியல் ரீதியாக ஏமாற்றப்படுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது பெண். இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணுக்கு சிவசுப்பிரமணியம் என்பவருடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்மூலம் இருவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியுள்ளது.
இந்த பழக்கத்தை காரணமாக வைத்து சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு சிவசுப்பிரமணியம் வந்துள்ளார். அப்போது சிவசுப்பிரமணியம், அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்தாராம். இதை குடித்த சிறிது நேரத்தில் அந்த பெண் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து சிவசுப்பிரமணியம், பெண்ணின் கழுத்தில் கிடந்த 13.5 பவுன் தங்க தாலி சங்கிலியை திருடி விட்டு தப்பிச் சென்றார்.
மயக்கம் தெளிந்ததும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் சிவசுப்பிரமணியம் தான், நகைகளை பறித்துச் சென்றது உறுதியானது. ஆனால், சிவசுப்பிரமணியத்திடம் கேட்ட போது அவர் நகையை கொடுக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட பெண் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற சிவசுப்பிரமணியத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Read More : அடடே சூப்பர் நியூஸ்..!! இனி மாதந்தோறும் ரூ.1,000 இவர்களுக்கும் கிடைக்கும்..!! வெளியான அறிவிப்பு..!!