655 அறைகள்! 28 ஏக்கர் பரப்பளவு! புதிய தெலுங்கானா தலைமைச் செயலகத்தை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திறந்துவைத்தார்.
கடந்த 27 ஜூன் 2019 அன்று, தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் தெலுங்கானா செயலகம் கட்ட அடிக்கல் நாட்டினார். கொரோனா காரணமாக தெலுங்கானா செயலகம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டது. தெலுங்கானா புதிய செயலகத்தில் மொத்தம் 655 அறைகள் மற்றும் 30 மாநாட்டு அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தெலுங்கானா தலைமை செயலகத்துக்கு டாக்டர் அம்பேத்கர் தலைமை செயலகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் ஹைதராபாத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை திறந்து வைத்தார். 28 ஏக்கர் பரப்பளவில் இந்த செயலகம் கட்டப்பட்டது. தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளுக்கு 8 ஆயிரம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டது. 60 ஆயிரம் கன மீட்டர் சிமென்ட் பயன்படுத்தப்பட்டது. 11 லட்சம் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.
கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய அவர், “இன்றைய தினம் தெலுங்கானா வரலாற்றில் சிவப்பு எழுத்தில் குறிக்க வேண்டிய நாள்” என்றார். “புதிய செயலகத்தின் அற்புதமான அமைப்பு அரசு நிர்வாகத்தின் மையப்பகுதியாகும். அற்புதமான புதிய செயலகத்தை திறந்து வைத்ததை நான் பாக்கியமாகவும், அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன்” என்றும் அவர் கூறினார்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பியின் லட்சியங்களை உணர்ந்து செயல்பட மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கட்டிடத்துக்கு பி.ஆர்.அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது” என முதல்வர் கே.சி.ஆர். குறிப்பிட்டார்.