“தேர்தலுக்கு பிறகு எடப்பாடி தலைமையிலான அதிமுக இருக்காது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை ஆதரித்து தமிழக பாஜக தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ஒப்பந்ததாரர்களுக்காக அதிமுக நடத்தப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இதை எல்லாம் ஆண்டவனோடு சேர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அதிமுகவை ஒப்பந்தரார்களுக்கு தாரை வார்த்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. அவர் நிறுத்தியிருக்கிற வேட்பாளர்களை பார்த்தாலே இது தெரியும்.
அதிமுக தொண்டர்கள் அனைவரும் டிடிவி தினகரன் பக்கம் உள்ளனர். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும். தினகரன் கையில் அதிமுக சென்றிருந்தால் ஸ்டாலின் முதலமைச்சராகியிருக்க மாட்டார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் டிடிவி தினகரன் பக்கம் உள்ளனர்” என்றார்.