fbpx

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்!… இந்திய வீரர் அபிஷேக் பால் வெண்கலப்பதக்கம்!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் பால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று தொடங்கியது. வருகிற 16-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் இந்தியா பதக்க கணக்கை தொடங்கியுள்ளது. ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அபிஷேக் பால் 29 நிமிடம் 33.26 வினாடிகளில் இலக்கை கடந்து 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். ஜப்பானின் ரென் தஜவா (29 நிமிடம் 18.44 வினாடி) தங்கப்பதக்கமும், கஜகஸ்தானின் கோச் கிமுடாய் ஷட்ராக் வெள்ளிப்பதக்கமும் (29 நிமிடம் 31.63 வினாடி) பெற்றனர்.

பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னுராணி ஏமாற்றம் அளித்தார். மயிரிழையில் பதக்கத்தை நழுவ விட்ட அவர் 59.10 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 4-வது இடத்தை பிடித்தார். 400 மீட்டர் ஓட்டத்தில் ராஜேஷ் ரமேஷ், முகமது அஜ்மல் மற்றும் வீராங்கனை ஐஸ்வர்யா மிஸ்ரா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்..

Kokila

Next Post

துலீப் கோப்பை கிரிக்கெட் பைனல்!... முதல் இன்னிங்சில் தெற்கு மண்டல அணி தடுமாற்றம்!... முதல் நாள் ஆட்டத்தில் 182 ரன்கள் சேர்ப்பு!

Thu Jul 13 , 2023
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் தெற்கு மண்டல அணிக்கெதிரான ஆட்டத்தின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு மண்டல அணி 182 ரன்கள் எடுத்துள்ளது. துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் தெற்கு-மேற்கு மண்டலம் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த தெற்கு மண்டல அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரவிகுமார் சமார்த் 7 ரன்னிலும், மயங்க் அகர்வால் 28 ரன்னிலும் கேட்ச் […]

You May Like