fbpx

BEL நிறுவனத்தில் B.E முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! 24-ம்‌‌ தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer – I, பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 38 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.50,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Detailed%20%20Advertisement-28-02-23.pdf

Vignesh

Next Post

அடேங்கப்பா மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா…..! ஐநா சபை வெளியிட்ட அறிக்கையில் தகவல்…….!

Fri Apr 21 , 2023
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை அறிக்கை 2023 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை அறிக்கையை இன்றைய தினம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் உலக நாடுகளின் மக்கள் தொகை தொடர்பான விபரங்கள் இடம் பெற்றுள்ளனர். அதன்படி இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விடவும் 29 லட்சம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி என்று தெரியவந்துள்ளது. அதேபோல சீனாவின் மக்கள் தொகை 142.57 […]

You May Like