fbpx

பீகார் முதலமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது..

கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. மேலும் சராசரியாக 4 மாதங்களுக்கு ஒருமுறை கொரோனாவின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருகிறது..

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. எனவே நோய்ப்பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.. இதனிடையே நாட்டில் பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினருக்கும் தொற்று உறுதியாகி வருகிறது..

இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. கடந்த 4 நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர், மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் சிக்க்சை பெற்று வருகிறார்..

Maha

Next Post

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் இதுதான்...

Tue Jul 26 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
தங்கம்

You May Like