செப்டம்பர் 10-ம் தேதி முதல் பொறியியல் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்..
தமிழ்நாடு முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளில் சேருவதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள 1,58,157 பேர் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டனர். மொத்தம் 1,48,811 இடங்கள் இருக்கின்றன.. பொதுப்பிரிவு கலந்தாய்வு கடந்த 25-ம் முதல் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. சிறப்பு பிரிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கும் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதை சிறப்பு பிரிவில் நடத்தாமல், பொதுப்பிரிவு கலந்தாய்வு நடத்தும் அதே தேதியில் நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்திருந்தது.
இதனிடையே நீட் தேர்வு முடிவுகள் தாமதமாவதால் கலந்தாய்வு தள்ளி வைக்கபப்ட்டது.. நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட 2 நாட்களுக்கு பிறகு கலந்தாய்வு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.. இந்நிலையில் நீட் தேர்வு செப்டம்டர் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கலந்தாய்வுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 10-ம் தேதி முதல் பொறியியல் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த தகவலை வெளியிட்டார்.. நவம்பர் 13 வரை 4 கட்டங்களாக இந்த கலந்தாய்வு நடைபெறும் என்றும் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.. எஸ்.சி. எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நவம்பர் 10 முதல் நவம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறினார்.. செப்டம்பர் மாத இறுதியில் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்..