fbpx

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை கனமழை பெய்யும்…! மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்…!

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்று மற்றும் நாளை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக் கொண்டால் போதும்.. வயிற்று பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு

Fri Jul 22 , 2022
பாரம்பரிய மருத்துவத்தில் பெருங்காயம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் பெருங்காயத்தில் ஆண்டி வைரஸ், ஆண்டி பயாடி, ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் உள்ளதால் இது ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும்.. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. வயிற்றுப் பிரச்சினைகளில் இருந்து விடுபட: பயறு மற்றும் காய்கறிகளுடன் உங்கள் உணவில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானம் அடைய உதவும். கூடுதலாக, […]

You May Like