fbpx

பைத்தியம்!… நடிகை அசின் – ராகுல் ஷர்மா விவாகரத்து?… நண்பர் அக்ஷய் குமார் ஓபன் டாக்!

Asin: மோகன் ராஜா இயக்கிய ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அசின். அதன் பின் ‘சிவகாசி’, ‘கஜினி’, ‘போக்கிரி’ போன்ற படங்களில் நடித்து தமிழ் மக்களின் மனதைக் கொள்ளை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழ் படங்களின் ஹிட்களைத் தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகள் வந்ததால் அங்கு சென்று சல்மான் கான், ஆமீர் கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பின் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் உரிமையாளர் ராகுல் சர்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அரின் என்ற பெண் குழந்தையும் உள்ளது.

அசின் – ராகுல் சர்மா ஜோடிக்குத் திருமணமாகி ஏழு ஆண்டுகள் நிறைவான நிலையில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்ளப் போவதாக அவ்வபோது சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும், இருவரும் வதந்திகளை நிராகரித்து விளக்கமளித்தனர்.

இந்தநிலையில் ராகுல் ஷர்மாவின் நெருங்கிய நண்பரும் நடிகருமான அக்ஷய் குமார், இருவரின் விவாகரத்து வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். உண்மையில், மைக்ரோமேக்ஸ் உரிமையாளரான ராகுல் ஷர்மா அவரது மனைவி அசினை எவ்வாறு நடத்துகிறார் என்பது குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஷிகர் தவானுடனான நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல் ஷர்மாவின் வீடியோ வெளியானது. அதில், ராகுல் தனது மகள் பிறந்த நேரத்தையும், அதைப் பற்றி தெரிந்து கொள்ள அக்ஷய் தனக்கு அழைப்பு விடுத்ததையும் நினைவு கூர்ந்தார். தனது குடும்பத்திற்கு முன்பே அக்ஷய் குமாருடன் பகிர்ந்து கொண்டார், மேலும், “எனது குடும்பம் வருவதற்கு மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே, அவர் முதலில் உள்ளே வந்தார், இது என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத நினைவு” என்று கூறியிருந்தார்.

அந்த வீடியோவுக்குப் பிறகு, ராகுல் உண்மையில் அசினை எப்படி நடத்துகிறார் என்பதை வெளிப்படுத்திய அக்‌ஷய் குமார், “அவர் தனது மனைவி, குழந்தையை பைத்தியக்காரத்தனமாக காதலிக்கிறார். அவர் அசினை தெய்வமாக நடத்துவது போன்று இருந்தது என்று பேசியுள்ளார்.

Readmore: பயங்கரம்!… பைக்கில் சென்ற மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு!… 40 பேர் பலி!… பதறிய மக்கள்!

Kokila

Next Post

ஹைதராபாத்தை பொட்டலம் போட்ட கொல்கத்தா!! வெற்றி நடையோடு பைனலுக்குள் நுழைந்தது!

Wed May 22 , 2024
ஐபிஎல் தொடரின் பைனலுக்கு கொல்கத்தா அணி எளிதாக முன்னேறியது. தகுதிச்சுற்று 1ல் ஹைதராபத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியாவில் 17வது ஐபிஎல் சீசன் நடந்து வருகிறது. நேற்று ‘பிளே ஆப்’ சுற்று துவங்கியது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ‘தகுதிச்சுற்று-1’ல் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடித்த கொல்கத்தா(20), ஹைதராபாத் (17) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு […]

You May Like