fbpx

கடிதம் எழுதி வைத்து விட்டு, ப்ளஸ் 2 படிக்கும் மாணவிகள் மாயம்.! தவிப்பில் பெற்றோர்.!

அம்மா… அப்பா.. என்னை மன்னிச்சுடுங்க. தேடாதீங்க’ என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, ப்ளஸ் 2 படிக்கும் மாணவி, தனது நெருங்கிய தோழியுடன் காணாமல் போயிருப்பது திண்டுக்கல் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்து உள்ள பட்டிவீரன்பட்டி அருகே உள்ள காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தான் கண்ணன். இவருக்கு செல்வ ஹர்ஷனா(17) என்கிற ஒரு மகள் இருக்கிறாள்.

அதே பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாமகோட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகள் ஞானதர்ஷினி (17). இவர்கள் இருவரும் தோழிகளாக பழகி வந்த நிலையில் இருவரும் பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

டியூசனுக்குச் செல்வதாக கூறி நேற்று மாலை வீட்டிலிருந்து இருவரும் சென்ற நிலையில், வெகு நேரம் கழித்தும் வீடு திரும்பவில்லை. இதனால் ட்யூஷன் வகுப்பில் விசாரித்த போது, மாணவிகள் டீயூசனுக்கும் போகவில்லை என்பது பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து, மேலும் இருவரும் தீபாவளிக்கு வாங்கிய புத்தாடையை மட்டும் பேக்கில் வைத்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மாணவி செல்வ ஹர்ஷனா, தனது வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. அக்கடிதத்தில் அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். என்னைத் தேட வேண்டாம் என எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வ ஹர்ஷனாவின் தாயார் முத்துலட்சுமி, பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து, நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகனின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு ...

Tue Oct 25 , 2022
தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நேற்று புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் ஆரவாரமாக தீபாவளியை நேற்று கொண்டாடினர். கொரோனா காலக்கட்டம் என்பதால் கடந்த மூன்று ஆண்டுகள் சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து மிகச் சிறப்பான பண்டிகையாக கொண்டாடினர். தீபாவளி பண்டிகை ஒட்டி பட்டாசு வெடித்ததால் கடுமையான மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு […]

You May Like