fbpx

திமுக பெண் கவுன்சிலரின் குடும்பத்தினருக்கு சரமாரி அரிவாள் வெட்டு….! கோவையில் நடந்த பயங்கர சம்பவம்….!

இரவு நேரத்தில் ஆளுங்கட்சியின் கவுன்சிலர் வீட்டிற்குள் புகுந்து, கணவன், மகன், கவுன்சிலர் என ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் சரமாரியாக ஒரு மர்ம கும்பல், வெட்டி,விட்டு தப்பி சென்ற சம்பவம் கோவையில், பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஔவை நகரை சேர்ந்தவர் சித்ரா(44). இவர் திமுகவை சேர்ந்த நபர் என்று கூறப்படுகிறது. மேலும் மூன்றாவது வார்டு கவுன்சிலராக இவர் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வீட்டில் இவர் தங்கியிருந்த போது, திடீரென்று, அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் சித்ரா மற்றும் அவருடைய கணவர் ரவிக்குமார்(47), மகன் மோகன்(24) உள்ளிட்டோரை அரிவாளால் சரமாரியாக வெட்டி, விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, மூவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அதன் பிறகு மூவரையும், ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இது குறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் விசாரணை முடியும்போது தான், அந்த மர்ம கும்பல் எதற்காக கவுன்சிலரின் குடும்பத்தை கொலை செய்ய முயற்சி செய்தது? என்ற விவரம் தெரிய வரும்.

Next Post

தாய் மகள் இருவரிடமும் உல்லாசம்…..! இறுதியில் இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!

Sat Aug 12 , 2023
தாய் மகள் அண்டை வீட்டு பெண் என்று நான்கு பேருடன் திகட்ட, திகட்ட உல்லாசம் அனுபவித்த இளைஞர் சிறுமி கர்ப்பமானதால், அதிர்ச்சி அடைந்த தாயார் காவல்துறையிடம் சிக்கிய இளைஞர். கன்னியாகுமரி மாவட்டம் இருளபுறத்தை சேர்ந்த விஷ்வா என்ற இளைஞர் கடந்த 2022-ஆம் வருடம் கிருஷ்ணகிரியில் இருக்கின்ற ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதை கடையில் பணிபுரிந்து வந்த 21 வயது இளம் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. […]

You May Like