fbpx

ஆசிரியர்களுக்கு இன்பமான செய்தி : தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு ….

தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் ஊராட்சி, நகராட்சி , மாநகராட்சி உள்ளிட் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக 2,760 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கிஅரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
துகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் கடந்த 1990-91ம் ஆண்டு மற்றும் 2002-2003ம் ஆண்டு முதல் 2006-2007ம் கல்வி ஆண்டு வரை 45பள்ளிகளுக்கு 45முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களும், 45 முதுநிலை பொருளாதார ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப் பட்டனர். மேலும், கடந்த 2011-2012ம் கல்வி ஆண்டில் 100 நகராட்சி, மாநகராட்சி, அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என 9 பாடங்களுக்கு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து 2014-2015ம் கல்வி ஆண்டிலும் இதேபோல் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
2018-2019ம் கல்வி ஆண்டில் 5 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் அதன் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் நிலை உயர்த்தப்பட்டு அதற்கான பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அத்துடன் 5 பள்ளிகளிலும் தலா 6 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என 30 பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டன. இப்பணியிடங்களை பணி நிரவல் மூலம் நிரப்பவும் அரசு உத்தரவிட்டது.
2018-2019ம் கல்வி ஆண்டில் 95 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் 5 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 5 அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளும் உருவாக்கப்பட்டது. இவ்வாறு 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு 100 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டது.
2018-2019ம் கல்வி ஆண்டில் 95 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 95 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில் தலா 6முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 570 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
200 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 100 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2,460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 2,760 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.12.2021 வரை ஏற்கனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை, பணி நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், அவர்களுக்கு 1.01.2022 முதல் 31.12.2022 வரை ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Post

மருமகன் ரிஷி சுனக்கிற்கு மாமனார் வாழ்த்து ....

Tue Oct 25 , 2022
இங்கிலாந்து பிரதமராக பதவியேற்கும் மருமகன் ரிஷி சுனக்கினை வாழ்த்தி இருக்கிறார் மாமனாரும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி. இங்கிலாந்தின் பிரதமராக போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் 57 வது பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் 42வயது நிரம்பிய நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.ரிஷி சுனக்கிற்கும் இந்தியாவிற்கும் உள்ள நெருக்கம் ஏராளம். பெற்றோர் இருவருமே இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் வழி […]

You May Like