பொதுவாக கீரைகளில் பல்வேறு வகையான சத்துக்கள் இருக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கீரைகளிலேயே மகத்துவம் வாய்ந்த கீரை தான் கரிசலாங்கண்ணி. இந்தக் கீரையில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுவதால் இதனை ஞான மூலிகை என்று முன்னோர்கள் அழைத்து வந்தனர். கரிசலாங்கண்ணி கீரையை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் என்பதை குறித்து பார்க்கலாம்?
1. ஆயுளை அதிகப்படுத்தும் மருத்துவ குணம் வாய்ந்த கரிசலாங்கண்ணிக் கீரையை ஆயுள் விருத்தி என்றும் அழைத்து வந்தனர்.
2. கரிசலாங்கண்ணி கீரையை சாறாக எடுத்து இளநீரில் கலந்து குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
3. கரிசலாங்கண்ணிக் கீரையை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால் பல் வலி, பல் கூச்சம் போன்ற பல் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கவும் உதவுகிறது.
4. ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகப்படுத்தி ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது.
5. கர்ப்பிணி பெண்கள் இந்த கீரையை தினமும் உணவில் கட்டாயமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
6. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து குடித்து வந்தால் கல்லீரல் தொடர்பான நோய்கள் நீங்கும்.
7. மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாக கரிசலாங்கண்ணிக் கீரை உள்ளது.
8. மஞ்சள் கரிசலாங்கண்ணி வலிப்பு நோய் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கிறது.
9. கரிசலாங்கண்ணி இலையை சாறு எடுத்து நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இருமலுக்கு சிறந்த மருந்தாக இது பயன்படுகிறது.
10. கரிசலாங்கண்ணி நல்லெண்ணெய் சாறை தலைக்கு தேய்த்து குளிக்கவும் செய்யலாம். இதன் மூலம் கண் எரிச்சல், உடல் சூடு, காது வலி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
அன்றாட உணவில் கரிசலாங்கண்ணிக் கீரையை துவையலாகவோ, பொறியலாகவோ செய்து சாப்பிட்டு வருவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தந்து ஆயுளை பெருக்கும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.