தன்னுடன் படித்து வந்த தன்னைவிட வயதில் மூத்த ஒரு மாணவியை, 20 வயது மாணவன் பேய் ஓட்ட தெரியும் என்று சொல்லி, கற்பழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்று உள்ளது.
இந்த சம்பவம் சென்ற 2019 ஆம் வருடம் நடைபெற்று உள்ளது. அப்போது, அந்த இளைஞர் தனக்கு பேய் ஓட்ட தெரியும் என்று தெரிவித்து, 22 வயதான தன்னுடன் படிக்கும் ஒரு மாணவியை கற்பழித்துள்ளார். ஆனால், இந்த இளைஞரின் வயது 20 தான் என்று சொல்லப்படுகிறது.
சிங்கப்பூர் மருத்துவமனை அறிக்கையின் படி, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் IQ அளவு சராசரி நபர்களை விட சற்று குறைவாகவே இருப்பதாக கூறி இருக்கின்றது.
குற்றவாளியுடன் படித்து வந்த இந்த பெண், அந்த இளைஞரை விட அதிக வயதானவர் என்றாலும் கூட, அந்த இளைஞரை அண்ணா என்று அழைத்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த 2019 ஆம் வருடம் அந்த பெண்ணின் முகநூல் மூலமாக அவரை தொடர்பு கொண்டு, பேசத் தொடங்கி, பொது இடங்களில் இருந்து அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்று கூறப்படுகிறது.
பின்னர் இந்த பழக்கம் நாளடைவில், அந்த இளைஞர் மனதில் காதலாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், அந்த பெண் அந்த இளைஞரை அண்ணா என்று தான் அழைத்து வந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு அந்த இளைஞர் மீது காதல் போன்ற உணர்வு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர், அந்த பெண்ணிடம் கோவில் வழிபாட்டில் தனக்கு அதிக ஆர்வம் உண்டு என்றும், எனக்கு பேய் ஓட்ட தெரியும் எனவும் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார் அந்த இளைஞர். அதோடு, அந்தப் பெண்ணையும், அவருடைய சகோதரியையும் சில ஆவிகள் பின் தொடர்ந்து வருவதாக கூறி, அதை விரட்ட பரிகாரம் செய்கிறேன் என்றும் கூறியுள்ளார் அந்த இளைஞர்.
ஒரு நாள், தன்னுடைய வீட்டிற்கு அந்த இளம் பெண்ணை, அழைத்து சென்ற அந்த இளைஞர், அந்த பெண்ணின் உடலில் இருந்த ஆடைகளை நீக்கிவிட்டு, அவர் கைகளால், அந்த பெண்ணின் உடலில் சில குறியீடுகளை வரைய வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார். ஆனால், பயந்து போன அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இரண்டு சமயங்களில், பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் அந்த இளைஞர்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி அந்தப் பெண் தனக்கு நடந்த அனைத்தையும் தன்னுடைய நண்பர்களிடம் தெரிவித்ததை கேட்டு, அதிர்ந்து போன அவர்கள், உடனடியாக காவல் துறையில் புகார் வழங்கியிருக்கின்றன.
அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணை, அந்த இளைஞர் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. ஆகவே, அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர், ஆகவே சுமார் மூன்று வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்துள்ளது. ஆகவே தான் நேற்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அந்த இளைஞருக்கு 18 வருடங்கள் மற்றும் 11 மாதங்கள் சிறை தண்டனையும், மேலும், 16 சவுக்கடியும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
இதனை அடுத்து அவரிடம் விசாரித்தபொழுது அந்த பெண்ணை அவர் இருமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. அந்த ஆண்டே அவர் கைது செய்யப்பட்ட நிலையில், சுமார் மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று செப்டம்பர் 7ஆம் தேதி அவருக்கு தீர்ப்பிடப்பட்டுள்ளது அவருக்கு 18 ஆண்டுகள் 11 மாதம் மற்றும் மூன்று வாரம் சிறை தண்டனையும், 16 சவுக்க அடியும் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.