மேற்கு வங்க மாநிலத்தில் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மத்யகிராம் பகுதியைச் சேர்ந்தவர் நூர்தீன் மொண்டல். 55 வயதான இவர் சொத்து தகராறு காரணமாக தனது மனைவியை கொலை செய்து இருக்கிறார். மேலும் தான் செய்த கொலையை மறைப்பதற்காக மனைவியின் இறந்த சடலத்தை 6 துண்டுகளாக வெட்டி சாக்கு பையில் வைத்து அருகில் உள்ள கால்வாயில் வீசி இருக்கிறார். மேலும் தனது மனைவியை காணவில்லை என காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதே சம்பவம் தொடர்பாக அவரது மகளும் காவல்துறையில் புகார் தெரிவித்து இருந்ததால் மாட்டி விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் நூர்தீன். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தங்களது பாணியில் விசாரித்ததில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை எடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.