நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த சூழலில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் இந்தி வெர்ஷனை பார்க்க மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ. 6.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக விஷால் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதனைதொடர்ந்து, கடந்த 2016 -ம் ஆண்டு என் நடிப்பில் தயாரிப்பில் வெளியான அப்பா படத்திற்கு வரிவிலக்கு பெறுவதற்காக சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுத்தேன் என்றும், அது வருத்தமான விஷயமாக இருந்தது என்றும் சமுத்திரகனி குற்றம்சாட்டியுள்ளார். சென்சார்போர்டில் இதுவரை தான் பணம் கொடுத்தது இல்லை எனவும், ஆனால் ‘அப்பா’ திரைப்படத்திற்கு டேக்ஸ் ஃப்ரீ வாங்க பணம் கொடுத்ததாகவும் கூறினார். அரசே எடுக்க வேண்டிய படத்தை தான் செலவழித்து எடுத்தும், அதற்கு பணம் கொடுத்து டேக்ஸ் ஃப்ரீ வாங்கியதும் வருத்தம் அளிப்பதாக வேதனை தெரிவித்தார்.