fbpx

Today Gold Rate : அப்பாடா.. ஒருவழியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த வகையில், பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

அந்த வகையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.60,080-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,510-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிலோ1,04,000 க்கு விற்பனையாகிறது.

Read more : பத்ம பூஷன் விருதுபெற்ற இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மீது வழக்குப்பதிவு!. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பெங்களூரு போலீஸ் அதிரடி!

English Summary

In Chennai today, the price of gold jewelry has decreased by Rs. 240 per sovereign, and a sovereign of gold is being sold for Rs. 60,080.

Next Post

தனக்கு எதிரான விசாரணையில் ஈடுபட்ட நீதித்துறை ஊழியர்களை பணி நீக்கம் செய்தார் டிரம்ப்..!!

Tue Jan 28 , 2025
Trump Fires Special Counsel Staff Who Probed Him After 2020 Defeat

You May Like