fbpx

கர்நாடகா: பரபரப்பு…. முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் பற்றிய தீ! நடந்தது என்ன?

கர்நாடக முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சியின் முதல்வராக இருப்பவர் பசவராஜ் பொம்மை. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவிலுக்கு தனது மனைவியுடன் சாமி கும்பிடுவதற்காக சென்று இருக்கிறார். அப்போது தான் இவரது ஹெலிகாப்டரில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது இந்த விபத்தில் எந்தவிதமான சேதமோ, எதுவுமில்லை என அரசு தரப்பு அறிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சிகளும் இந்த விபத்து பற்றி பெரிதாக செய்தி ஒன்றும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு தனது மனைவியுடன் தரிசனம் செய்வதற்காக வந்திருக்கிறார் பசவராஜ் பொம்மை. அவர் வந்திறங்கியஹெலிகாப்டர்

கிளிப்பேட்டையில் தரையிறங்கிய பின்னர் சிறிது நேரத்தில் அதன் இறக்கைகளிலிருந்து நெருப்பு கசிந்ததாக தெரிகிறது. பின்னர் விரைவாக நெருப்பு பற்றி தொடங்கி இருக்கிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடுமையாக போராடி தீயை அனைத்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். வருகின்ற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கின்ற வேளையில் இதுபோன்று நடைபெறும் சம்பவங்கள் அனைத்து மக்கள் மத்தியிலும் பயத்தை ஏற்படுத்துகின்றன.

Rupa

Next Post

நாமக்கல்: "செல்போனில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த ஆசிரியர்"! கொதித்தெழுந்த பெற்றோர் போராட்டம்!

Thu Apr 13 , 2023
‌நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் என்ற பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளை செல்போனில் தவறாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் பாத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் கீரம்பூரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் அங்குள்ள மாணவிகளை தனது செல்போனில் தவறாக புகைப்படம் மற்றும் […]

You May Like