fbpx

ஆளில்லாத வீட்டில் நிர்வாணமாக கட்டி வைக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவி….! அவருக்கு என்ன நடந்தது தெரியுமா….?

கேரள மாநிலத்தில், ஒரு கல்லூரி மாணவி போதை மருந்து கொடுக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, கோழிக்கோடு தொட்டில் பாலம் அருகே ஆள் இல்லாத ஒரு வீட்டில், நிர்வாணமான நிலையில், ஒரு மாணவி கட்டி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அதன் பிறகு, சுயநினைவு இல்லாமல் இருந்த அந்த மாணவியை, அங்கிருந்து மீட்ட காவல்துறையினர், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அந்த மாணவியை அனுமதித்தனர். அதன் பிறகு அந்த மாணவிக்கு நினைவு திரும்பி இருக்கிறது.

மேலும், சுயநினைவுக்கு வந்த பிறகு, அந்த மாணவி, காவல்துறையிடம் வழங்கிய வாக்குமூலத்தில், தன்னுடைய அண்டை வீட்டைச் சேர்ந்த ஜூனைத் அலியார் (25) என்ற இளைஞர், தன்னை கடத்திச் சென்று, சித்திரவதை செய்து, போதை மருந்து வழங்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அவர் தன்னை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை எடுத்ததாக கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, ஜுனைத் அலியார் என்ற இளைஞர் மீது, பாலியல் பலாத்காரம், கடத்தல், மிரட்டல் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ததற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். குற்றம் சுமத்தப்பட்டவரின் வீட்டில் இருந்து, ஐந்து கிராம் போதை பொருளையும் கைப்பற்றி இருக்கிறார்கள். அவரை கைது செய்ய டிஎஸ்பி விவி லத்தீஷ் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், மிக தீவிரமாக தேடி வருகின்றனர். நீதிபதியின் முன்னிலையில் மாணவியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினர் தரப்பில் தெரிவித்ததாவது, நாங்கள் மாணவியை மீட்பதற்காக செல்வதற்கு முன்னரே, ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, அந்த இளைஞர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று விட்டார். அவர் இருக்கும் இடத்தைப் பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அவர் மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளனர். மேலும், அந்த இளைஞரை கண்டுபிடிக்க புலனாய்வு குழு லுக் அவுட் நோட்டீசை வெளியிட்டு இருக்கிறது. அந்த மாணவியை கடத்தி, போதை பொருள் வழங்கி வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு...! 8-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்...!

Sun Aug 27 , 2023
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver (Ordinary Grade) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என இரண்டு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 27க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி […]

You May Like