fbpx

Alert: 530 கிமீ தொலைவில் தாழ்வு மண்டலம்… 16 மாவட்டத்தில் கனமழை இன்று கனமழை…!

தமிழகத்தில் இன்று 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 110 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 530 கிமீ தொலைவிலும் தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

தமிழகத்தில் டிசம்பர் 3-ம் தேதி வரை மழை நீடிக்கும். இன்று (நவ.28), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும்.

தமிழக கடலோரம், அதை ஒட்டிய பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். 29, 30-ம் தேதிகளில் வட தமிழக கடலோரம், அதை ஒட்டிய பகுதிகளில் அதிகபட்சமாக 75 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

Low-lying area 530 km away… Heavy rain in 16 districts Heavy rain today

Vignesh

Next Post

”இனி எங்கும் அலைய தேவையில்லை”..!! வீட்டில் இருந்தே பட்டாவை மாற்றலாம்..!! எப்படி தெரியுமா..?

Thu Nov 28 , 2024
Now, if you want to change your property title, you can apply from home.

You May Like