fbpx

மதுரை ரயில் தீ விபத்து…! FIR பதிவு… இன்று விசாரணை தொடக்கம்…! தெற்கு ரயில்வே பொது மேலாளர் புதிய தகவல்…!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது சுற்றுலாப் பயணிகள் மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது ரயில்வே தெரிவித்துள்ளது. “ஐபிசி பிரிவின் கீழ் மற்றும் ரயில்வே சட்டப் பிரிவின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட்மார்ட்டம் முடிந்த உடனேயே உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான உறவினர்கள் லக்னோ பகுதியைச் சுற்றி உள்ளனர், எனவே உடல்களை விமானம் மூலம் லக்னோவுக்கு கொண்டு சென்று அந்தந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக” தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.

மதுரை ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து இன்று சட்டப்பூர்வ விசாரணை நடத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த விசாரணை இன்று மதுரையில் உள்ள கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள டிஆர்எம் மாநாட்டு அரங்கில், பெங்களூரு தெற்கு வட்டம், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சூரியனை ஆய்வு செய்ய, செப்டம்பர்-2ல் விண்ணில் ஏவப்படுகிறது "ஆதித்தியா எல்1" விண்கலம்…!

Sun Aug 27 , 2023
சந்திராயன் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்தடுத்து பல விண்கலங்களை இஸ்ரோ அனுப்ப உள்ளது. அதில் முதற்கட்டமாக சூரியனை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆய்வு செய்ய “ஆதித்தியா எல்1” விண்கலம் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குனர் நிலேஷ் எம். தேசாய் தெரிவித்துள்ளார். பூமியில் இருந்து 15லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்தவாறு சூரியனின் ஒளிவட்டம், சூரிய புயல்கள் […]

You May Like