fbpx

என்னதான் நடக்குது நாட்டுல, பள்ளி பேருந்தில் கற்பழிக்கப்பட்ட 6️ வயது சிறுமி….! குற்றவாளி அதிரடி கைது எங்கே தெரியுமா….?

டெல்லியில், ஆறு வயது சிறுமி ஒருவர், தன்னுடைய பள்ளி வாகனத்திலேயே வைத்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.

டெல்லியின் பேகம்பூர் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி, பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை தன்னுடைய வீட்டு வாசலில், பள்ளிப் பேருந்து இறக்கி விட்டபோது, அந்த சிறுமியின் புத்தகப்பை, சிறுநீர் பட்டு, ஈரமாக இருந்தது என அந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் குறித்து, காவல்துறையினருக்கு கடந்த புதன்கிழமை அன்று தகவல் கிடைத்துள்ளது. அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வழங்கிய எழுத்துப்பூர்வமான புகாரில், மகள், பள்ளி பேருந்தில் சக மாணவன் ஒருவனால், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

அந்தப் புகாரின் பேரில், ipcயின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பேகம்பூர் காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதோடு, விசாரணை நடந்து வருகின்றது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதோடு, இந்த சம்பவம் குறித்து, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளனது தொடர்பாக, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை டெல்லி மகளிர் ஆணையம், ரோகினி நகர துணை காவல்துறை ஆணையரிடம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்த போது, தன்னைவிட வயதில் மூத்த ஒரு மாணவன்,தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டது தொடர்பாகவும், அந்த சிறுமி தெரிவித்திருக்கிறார். தற்போது அந்த மாணவனை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

பரபரப்பு..! கைது செய்யப்படுவாரா சீமான்..! ஊட்டிக்கு விரைந்தது தனிப்படை..!

Sun Sep 3 , 2023
‘பிரண்ட்ஸ்’ பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்கள் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் பிறகு இருவரும் பேசும் விடீயோக்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், நிறுத்தி வைத்த […]

You May Like