fbpx

பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை!… புதிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் விதிப்படி குறைந்தது மூன்று மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மகப்பேறு உதவி சட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண் ஊழியர்களுக்க 12 மாத காலம் ஊதியத்தோடு கூடிய மகப்பேறு விடுப்பு அளித்து வருகிறது. அதன் பிறகு உடல் நல கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவ சான்றிதழோடு கூடுதலாக 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு கிடைக்கும்.

இந்த நிலையில் மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது ஜார்கண்டில் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் திட்டத்திற்கு அந்த மாநில முதல்வரும் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி ஒப்பந்த முறையில் பணியாற்றி பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்றும் அரசு துறையில் 80 நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு இந்த விதி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஆஹா..! உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு Ph.D கட்டாயமில்லை...! யுஜிசி புதிய அறிவிப்பு!

Thu Jul 6 , 2023
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணியாற்ற முனைவர் பட்டம் கட்டாயம் இல்லை என யுஜிசி தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகளைத் தளர்த்தி உள்ளது., அதன் படி, உதவிப் பேராசிரியர் பதவிக்கு பிஎச்டி கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை வரவேற்றுள்ள ஆசிரியர் அமைப்புகள், 2018-ம் ஆண்டுக்கான விதியை UGC திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து […]

You May Like