வாக்காளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு – 2022-ன் சிறந்த பிரச்சாரத்திற்கான தேசிய ஊடக விருதுக்கு ஊடக நிறுவனங்களிடமிருந்து இந்திய தேர்தல் ஆணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கான 4 விருதுகளில் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகம் ஆகியவற்றுக்கு தலா ஒரு விருது அளிக்கப்படவுள்ளது.
தேர்தல் நடைமுறை, வாக்காளர் பட்டியலில் பெயர்களை இணைத்தல் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே சிறந்த முறையில் பங்களிப்பு செய்ததற்காக ஊடக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு தொகையுடன் கூடிய இவ்விருதுகள் தேசிய வாக்காளர் தினத்தன்று (ஜனவரி 25, 2023) அன்று வழங்கப்படும். விருதுகளுக்கான பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நவம்பர் 30, 2022க்குள் அனுப்ப வேண்டும்.