நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், நேற்று மகன் மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று அதிகாலை தந்தையும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புகைப்பட கலைஞரான செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன், நேற்று நீட் தேர்வில் தோல்வியடைந்த சோகத்தில், தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையில், அவருடைய தந்தை செல்வம் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவரது குடும்பத்தினரை கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
சென்னை, குரோம்பேட்டை, குறிஞ்சி நகரை சேர்ந்த புகைப்பட கலைஞரான செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன் (19). இவர், மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆகவே கடந்த இரண்டு வருடங்களாக, தொடர்ந்து, நீட் தேர்வை எழுதி வந்தார்.
ஆனால், இரண்டு முறையுமே நீட் தேர்வில் அவர் தோல்வியடைந்ததால், ஜெகதீஸ்வரன் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் தான், வீட்டில் யாரும் இல்லாத சமயமாக பார்த்து, நேற்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து, அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக தெரிவித்துவிட்டனர். இது தொடர்பாக, சிட்லபாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் தான், மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்த, ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வம், இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவருடைய உறவினர்களிடையே கடுமையான அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
நீட் தேர்வை எதிர்த்து போராடுவதற்கு, நான் தயார் என்றும், எனக்கு ஆதரவு வழங்கினால், தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்தும் நீட் தேர்வை ஒழித்துக் கட்ட முடியும் என்று, தன்னுடைய மகன் இறந்த சோகத்தில், நேற்று ஊடகங்களில் பேட்டியளித்த செல்வம், இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.