பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக முன்னரே தெரிவித்திருந்தார். அதன்படி இன்று திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னர் அவர் பேசியதாவது, தான் காவல் துறை பணியில் இருந்த போது லஞ்ச பணத்தில் ரபேல் வாட்ச் வாங்கியதாக திமுக பொய்யான தகவலை பரப்பியது.
நாட்டில் 2 ரஃபேல் வாட்ச் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது அதில் ஒன்றை நான் வைத்திருக்கிறேன். அதன் பில்லை இப்போது உங்களுக்கு சமர்ப்பித்துள்ளேன் இந்த பில்லை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கோயமுத்தூர் ஜிம்சன் என்ற நிறுவனத்தில் ரபேல் தன்னுடைய இரண்டாவது வாட்சை விற்பனை செய்துள்ளது. மே மாதம் 27ஆம் தேதி ரூபாய் 3 லட்சத்திற்கு இந்த ரபேல் வாட்சை நான் வாங்கினேன். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் என்னுடைய கையில் இருக்கும் ஒரே வாட்ச் இது மட்டும் தான் என்று அண்ணாமலை கூறியுள்ளார். முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால் இந்த அரசியலில் எனக்கு ஒரு மாதத்திற்கு 7 முதல் 8 லட்சம் வரையில் விரையம் ஆகிறது, எம்பிஏ படித்த போது வாங்கிய 11 லட்சம் கடனை 7 வருடங்கள் கட்டினேன் என்றும் அவர் கூறியுள்ளார்