fbpx

மாலத்தீவில், நடு ரோட்டில் அமைச்சருக்கு கத்திக்குத்து… பயங்கரவாதியின் தீவிர தாக்குதல்.. வைரல் வீடியோ..!

மாலத்தீவின் தலைநகரான மாலே தெருவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அலி சோலிஹ் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்த வந்த ஒருவர் தனது கையில் வைத்திருந்த கத்தியால் அமைச்சரை நான்கு முறை குத்த முயன்றார். அவரது குறி முழுவதும் அமைச்சரின் கழுத்தில் தான் இருந்தது. 

இருப்பினும் சுதாரித்து கொண்ட அமைச்சர் சோலி, தனது கைகளால் தாக்குதலை தடுக்க முயன்றார். இதனால் அவரது கையில் கத்திக்குத்து பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பிறகு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தனது வண்டியை அங்கேயே விட்டு தப்பி ஓடினார். தாக்குதல் நடத்தியவர் பிறகு கைது செய்யப்பட்டார். ஹுல்ஹுமாலேயில் இருக்கும் மருத்துவமனையில் அமைச்சர் சோலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோலி சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கிறார். அவர் ஜனாதிபதி இப்ராகிம் சோலியின் ஆளும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (MDP) கூட்டணிக் கட்சியான ஜும்ஹூரி கட்சியின் (JP) செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார்.

கடந்த மே 2021- ஆம் தேதி மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் தாக்கப்பட்டார். நஷீத் கார் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் வெடிகுண்டு வைக்கப்பட்டு காரர்களை வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த நஷீத்தை விமானத்தில் ஜெர்மனிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாகவே மாலத்தீவில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தையும் அரசு முன்னெடுத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பல இடங்களில் பயங்கரவாதச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Baskar

Next Post

’அப்படியெல்லாம் செய்ய முடியாது’..! அமைச்சருடன் வாக்குவாதம்..! இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்..!

Wed Aug 24 , 2022
செல்போனில் உணவுத்துறை அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில உணவுத்துறை அமைச்சராக இருப்பவர் ஜி.ஆர்.அனில். கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுமங்காடு தொகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தன்னையும் தனது குழந்தையையும் 2-வது கணவர் துன்புறுத்துவதாக கூறி திருவனந்தபுரம் வட்டப்பாறை போலீசில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த […]
போலி சாமியாரை புரட்டி எடுத்த போலீஸ்..!! ஜீவசமாதியால் மாட்டிக் கொண்ட ஆசாமி..!!

You May Like