இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட அங்கித் பங்காய் என்பவர் அமெரிக்காவில் மேரி லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்று கூறப்படுகிறது. இவர் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 9ம் தேதி இவர் மருத்துவமனைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திருப்பவில்லை.
அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாததால் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் இறுதியாக புகார் அளித்துள்ளார்கள்.
அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் அவருடைய புகைப்படத்தை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் ஒட்டி அவரை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் பல நாள் தேடுதல் வேட்டைக்குப் பின்னரும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.
இதனால் அந்த பகுதியில் உள்ள சர்ச் ஏரியில் அவர் விழுந்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்பட்டது ஆகவே நீரில் தேடும் சோனார் கருவியின் உதவியுடன் ஏரியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் அந்த கருவி ஏரியில் ஒரு வாலிபரின் உடலை கண்டுபிடித்தது.
அதை காணாமல் போன அங்கீத் பங்காய் என்பது காவல்துறையினரால் உறுதி செய்யப்பட்டது. ஆகவே காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை வேறு யாராவது அந்த ஏரியில் தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? என்று கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.