சேலம் மாவட்டம் ஜாகீர் ரெட்டிப்பட்டி ஓடை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (31), இவருடைய மனைவி மணிமேகலை(28). இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில்தான் ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மேலும் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
அந்த வகையில், நேற்று முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மணிமேகலை அடித்து புதைத்து துன்புறுத்தி இருக்கிறார். அதன்பிறகு அவர் தூங்குவதற்காக சென்று விட்டார் இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட மணிமேகலை வீட்டில் இருந்த குழவி கல்லை எடுத்து ரமேஷின் தலையில் போட்டார். இதில் ரத்த களத்தில் சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆகவே இரவு முழுவதும் கணவரின் உடலுடன் வீட்டிலிருந்த மணிமேகலை, சூரமங்கலம் காவல் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தார். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற சூரமங்கலம் காவல்துறையினர் ரமேஷின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கணவனை கொலை செய்த மணிமேகலையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.