பொள்ளாச்சி அருகே கடந்த 15 நாட்களுக்கு முன்னர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்டாட் மான்ஜி (31) என்பவர் ரமண முதலிபுதூர் பகுதியில் இருக்கின்ற பாட்டில் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. பணி முடிவடைந்த உடன் அருகில் இருக்கின்ற டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, ஏதாவது ஒரு இடத்தில் இரவு தங்கி விட்டு காலையில் பணிக்கு சென்று வருவதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
இத்தகைய நிலையில், நேற்று முன்தினம் இரவு ரமண முதலிபுதூர் பிரிவு நாக பிள்ளையார் ஆலயம் எதிரி படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவரை சில மர்ம நபர்கள் தலையில் மரக்கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். நேற்று காலை அந்த பகுதி வழியாக வந்த மக்கள் இதைக் கண்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வரைந்த கோட்டூர் காவல்துறையினர் அந்த வட மாநில தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளருக்கு கீர்த்திவாசன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.