ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அனைத்து சம்பளதாரர்கள், சுய தொழில் செய்பவர்களும் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் சேர முடியும் என்று சொல்லப்படுகிறது. எனினும், ஏற்கனவே உள்ள திட்டத்திற்கு புதிய இந்த பென்ஷன் திட்டத்திற்கு உள்ள மிக முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், பங்களிப்பு என்பது தன்னார்வ அடிப்படையில் இருக்கும். அரசு எந்த பங்களிப்பும் அளிக்காது. ஏற்கனவே உள்ள பென்ஷன் திட்டம் மற்றும் சேமிப்பு திட்டங்களை இணைத்து வரைமுறைப்படுத்தும் வகையில் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இதுவரை எந்த திட்டத்தின் கீழும் இணையாதவர்களை ஓய்வூதிய வரம்பிற்குள் கொண்டு வருவதே ஆகும். தற்போது அமைப்புசாரா தொழிலாளர்கள் வயதான காலத்தில் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாம்
இந்த திட்டத்திற்கான முன்மொழிவு ஆவண பணிகள் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இது குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அமைப்புசாரா தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்காக ஏற்கனவே அரசின் சேமிப்பு திட்டங்கள் பல உள்ளன.
மத்திய அரசில் ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் அவருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் கிடைக்கும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 25 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வுக்குப் பிறகு, ஒவ்வொரு மாதத்திலும் பாதி, அதாவது கடந்த 12 மாதங்களின் சராசரி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். அதே நேரத்தில், ஒருவர் 25 ஆண்டுகளுக்கும் குறைவாக பணிபுரிந்தால் அவரது ஓய்வூதியம் அதற்கேற்ப தீர்மானிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிவது கட்டாயமாகும்.
இந்த புதிய திட்டம் புதிய பென்ஷன் திட்டம் என்று தற்போதைக்கு அழைக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள தேசிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றவாகோ அல்லது அதனுடன் இணைத்தோ இது கொண்டு வரப்படாது எனவும், முழுக்க முழுக்க விருப்பத்தின் அடிப்படையிலானது இந்த திட்டம் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லபப்டுகிறது.
Read more : அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க..!! – சி.வி. சண்முகம்