நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
நேபாளத்தில் நேற்று இரவு 11.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கமானது நேபாளத்தில் 10 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ருக்கும் மேற்கு பகுதியில் 28 பேரும், ஜாஜர்கோட்டில் 20 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி, நொய்டா, பாட்னா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். தற்போதைக்கு உயிர், பொருள் சேதம் குறித்த தகவல் ஏதும் ஏற்படவில்லை. நிலநடுக்கம் சுமார் ஒரு நிமிடம் உணரப்பட்டது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். வீட்டில் படுத்திருந்த போது சீலிங் ஃபேன் ஆடியதாகவும், கட்டிலில் அதிர்வுகளை உணர்ந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளனர். அதன் பிறகே தங்களை போன்று பலரும் வீட்டை விட்டு வெளியே வந்திருந்ததை அறிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.