fbpx

யாருடன் கூட்டணி…? தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த பிரதமர் திட்டம்…!

அரசு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த பிரதமர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி வருகிறார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கிறார். நண்பகல் 12 மணியளவில், திருச்சியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

விமானப் போக்குவரத்து, ரயில், சாலை, கப்பல், உயர் கல்வி, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் தொடர்பான ரூ. 19,850 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, இத்துறைகளில் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

தலைவர்கள் சந்திப்பு

2024 மக்களவை தேர்தலை சந்திக்க தேசிய அளவில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதேபோல, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து ‘I.N.D.I’ கூட்டணியை உருவாக்கி உள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில், பாஜகவுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அரசு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த பிரதமர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Vignesh

Next Post

அதிபயங்கர நிலநடுக்கம் எதிரொலி!… ஜப்பானை தொடர்ந்து தென் கொரியா, தஜிகிஸ்தானிலும் நிலநடுக்கம்!

Tue Jan 2 , 2024
ஜப்பானை அதிரவைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தென்கொரியா, தஜிகிஸ்தான், ரஷ்யாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 2024 புத்தாண்டின் தொடக்கத்திலேயே ஜப்பானை பேராபத்து தாக்கியுள்ளது. ஜப்பானில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கத்தால் 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஹொக்கைடோவில் இருந்து கியூஷூ பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2.08 மீட்டர் […]

You May Like