புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 1ஆம் தேதி முன் தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.