fbpx

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரப்போகிறது.. எவ்வளவு தெரியுமா..?

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது..

தேநீர் விருந்து அழைப்பு..! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய கடிதம்..!

ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு அகவிலைப்படி விகிதம் அரசாங்கத்தால் திருத்தப்படுகிறது.. அந்த வகையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. வரும் 31-ம் தேதி, மத்திய தொழிலாளர் அமைச்சகம், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களை (ஏஐசிபிஐ) வெளியிட உள்ளது.. கடந்த நவம்பர் மாதத்தின் AICPI புள்ளிவிவரங்கள் 132.5. ஆக இருந்தது.. டிசம்பர் மாதத்திற்கும் ஒரே மாதிரியான குறியீட்டு எண்கள் இருந்தால், அகவிலைப்படி 3% உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, தற்போது 38 சதவீதமாக அகவிலைப்படி, 41 சதவீதமாக அதிகரிக்கும்.

41 சதவீதமாக கொண்டு DA 3% உயர்த்தி அரசாங்கம் அறிவித்தால் எவ்வளவு சம்பளம் உயரும்..? குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் வாங்கும் ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.10,800 சம்பள உயர்வு கிடைக்கும்.. .அதிகபட்ச அடிப்படை சம்பளம் 56,900 ரூபாய் வாங்கும் அரசு ஊழியருக்கு ரூ. 20,000 வரை சம்பளம் உயரும் என்று எதிர்பார்க்கபடுகிறது..

Maha

Next Post

சோசியல் மீடியாவில் கட்டண விளம்பரம் வெளியிட வழிகாட்டு நெறிமுறை...! மத்திய அரசு...!

Sat Jan 21 , 2023
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பங்கேற்கும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கட்டணம் விளம்பரம் வெளியிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங், வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் பாரம்பரியமான அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் தவிர டிஜிட்டல் ஊடகங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. டிஜிட்டல் ஊடகங்களில் விளம்பரங்கள் முறைப்படுத்தப்படவில்லை. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வரும் […]

You May Like